ஐபால் எஸ்-315 என்ற மொபைலை அறிமுகம் செய்ய உள்ளது ஐபால் நிறுவனம்!
நோக்கியா, மோட்டோரோலா, சாம்சங் நிறுவனங்கள் போல ஐபால் நிறுவனமும் மக்களிடையே சிறப்பான பெயர் பெற்ற நிறுவனம். இந்த மொபைல் டியூவல் சிம் போன் வசதி கொண்டது. இதனால் ஒரே சமயத்தில் இரண்டு சிம் கார்டுகளைப் பயன்படுத்த முடியும்.
2 இஞ்ச் திரை உள்ளதால் சற்று சிறியதாகக் காணப்படுகின்றது. ஐபால் ஷான்-315 மொபைல் 6 மணி நேரம் டாக் டைம் வசதியையும், 500 மணி நேரம் ஸ்டான்-பை டைம் வசதியையும் கொடுக்கும்.
இதில் உள்ள உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட கேமராவின் மூலம் துல்லியமான புகைப்படங்களைப் பெற முடியும். இந்த மொபைலில் 8 ஜிபி வரை மெமரி ஸ்டோரேஜ் வசதி கொண்டது.
இதன் புளூடூத் வசதியின் மூலம் தகவல்களைப் பரிமாற்றிக் கொள்ளலாம். இதில் நெட் வசதியும், வைபை வசதியும் இல்லை. இந்திய சந்தையில் இந்த மொபைலின் விலை ரூ.2,000.
இரவில் வேட்டையாடும் இந்த தவளையினம் கிரிக்கெட் பந்து அளவுக்கு வளருமாம்.
இந்தியாவில் இதுவரை கண்டறியப்படாத 12 புதிய வகை தவளையினங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
தவிர அழிந்துவிட்டதாக கருதப்பட்டு வந்த வேறு 3 தவளையினங்களையும் இவர்கள் மறுபடியும் கண்டுபிடித்துள்ளனர்.
தென்னிந்தியாவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய தவளையினங்கள் மிகவும் அரிதானவை என தவளை ஆராய்ச்சிக்கு தலைமையேற்றிருந்த விஞ்ஞானி சத்யபாமா பிஜு கூறினார்.
பூனை போல 'மியோவ்' என்று ஒலியெழுப்பக்கூடிய இரவில் வேட்டையாடும் தவளையினம், ஒரு கிரிக்கெட் பந்து அளவுக்கு வளரக்கூடிய கேரளத்தின் வயநாடு பகுதியில் காணப்படும் இரவில் வேட்டையாடும் தவளையினம் உள்ளிட்டவை புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தவளையினங்களில் அடங்கும்.
ஸுடாக்ஸா (Zootaxa) என்ற சர்வதேச அறிவியல் சஞ்சிகையில் இந்தக் கண்டுபிடிப்புகள் பற்றிய ஆய்வுக் கட்டுரை வெளியாகியுள்ளது.