அடடா… கலைஞரின் தமிழின உணர்வு புல்லரிக்க வைக்கிறது. sonia-karu4ஈழத்தில் கொல்லப்பட்ட தமிழனின் எண்ணிக்கை பத்து நூறாகி ஆயிரம் லட்சமாகி இன்று ஆயுளுக்கும் நெஞ்சை விட்டகலாத துன்பமாகிவிட்டது.
தமிழன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் ஒவ்வொருவரது இதயமும் ரத்தம் வடிக்கிறது. ஆனால் இங்கோ அது அத்தனை ஓட்டுப் பொறுக்கிகளுக்கும் தேர்தல் பிரச்சினைக்குத் தொட்டுக் கொள்ளும் உறுகாயாகிவிட்டது.
தேர்தல் வரை கொழுந்து விட்டு எரிந்த ஈழப் பிரச்சினை, தேர்தல் முடிந்ததுமே கை கழுவப்பட்டது. தனி ஈழம் என்று சொன்னவர், தேர்தல் தோல்வி தந்த கோபத்தில் ஒரு அறிக்கை விட்டு முடங்கிப் போக, அவருக்குப் போட்டியாக தமிழீழம் வாங்கித் தருவதாகச் சொன்னவர் இப்போது மீண்டும் தபால் அனுப்புவதிலும், தந்தியடிப்பதிலும்ம மும்முரமாகி விட்டார்.
தாயக தமிழினம் இந்த விளையாட்டுக்களை வேடிக்கை பார்க்க, உலகம் பேடித்தனமாய் வாய் மூடிக் கிடக்க, இந்தியப் பாதுகாப்போடு சிங்கள காடையர்கள் எம் உறவுகளைக் மொத்தமாகக் கொன்றழித்துவிட்டனர்.
யாருக்காக தமிழீழம்..? இனி எதற்காக தனி ஈழம்? யார் தலைமையில் தமிழீழம்?
இந்தக் கேள்விகளுக்கு உங்களிடம் பதிலிருக்கிறதா திமுக தலைவர் அவர்களே…
30 ஆண்டு காலம்… ஆயிரக்கணக்கான மறவர்களால் கட்டியெழுப்பப்பட்ட ஒரு நாட்டை, ராஜீவ் காந்தி என்ற சராசரி ஊழல் அரசியல்வாதி ஒருவரது மரணத்துக்காக நிர்மூலமாக்கிவிட்டீர்களே… நியாயமா?
ஈழத்தில் எம் உறவுகள் அழியும் போது, வேதனைக் குரலில் நாடகமாடி, தந்திகளையும் கடிதங்களையும் டெல்லிக்கு அனுப்பி வந்த நீங்கள், இன்று மத்திய ஆட்சியில் மகனுக்கும் மகளுக்கும் பங்கு வாங்க, இந்த தள்ளாத வயதிலும், நோயுடன் போராடிக்கொண்டிருக்கும் தருணத்திலும் விமானம் பிடித்து டெல்லி பறக்கிறீர்களே… உலக மகா நடிகரய்யா நீர்…
கொஞ்ச நஞ்சமிருந்த சின்ன மரியாதையும் தூக்கி எறிந்துவிட்டுச் சொல்கிறோம்… பழிவாங்கப்பட்டு, குடும்பங்களையும் எம் இனக் காவலர்களையும் இழந்துவிட்டு கண்ணீருடன் கதறும் எம் உறவுகளின் சார்பில் நின்று உணர்வுள்ள தமிழனாய்ச் சொல்கிறோம்…
எதிரிக்குக் கூட மன்னிப்புண்டு… இனப் படுகொலைக்கு மௌன சாட்சியாய் இருந்த உமக்கு எந்தப் பிறவியிலும் மன்னிப்பே கிடையாது! உங்கள் மரணத்தின்போது சிந்த இந்த தமிழர்களின் கண்களில் ஒரு சொட்டு கண்ணீரும் மிச்சமிருக்காது!
No comments:
Post a Comment
Visit : Click Here to Know the Latest News