•  
     
     
     
     
     
     
     
     
     
     
     

“சரணடைதலுக்காக பேசுமாறு புலிகள் என்னிடம் கோரினார்கள்” சன்டே ரைம்ஸ், மேரி கொல்வின்

“அது ஒரு அவசரமான தொலைபேசி அழைப்பு ஆனால் மணித்தியாலங்களுக்குள் இறக்கக்கப்போகும் ஒருவரின் அழைப்புமாதிரி அது இருக்கவில்லை. அரசியல் துறைப் பொறுப்பாளர், பாலசிங்கம் நடேசன், திரும்புவதற்கு ஒரு இடமும் இருக்கவில்லைபோலும்.” ஏன சன்டே ரைம்ஸ் செய்தியில் இன்று மேரி கொல்வின், நடேசன் மற்றும் விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் அவர்களின் கடைசி மணித்தியாலங்களுக்குள் அவர்களோடு தான் வைத்திருந்த தொடர்பை விபரமாகக் கூறியுள்ளார்.

“நாங்கள் எமது ஆயதங்களைக் கீழே போடுகிறோம்”, செய்மதித் தொலைபேசியில் சிறிலங்காவின் வடகிழக்குப்பகுதியில், கடைசியாக புலிகள் நிலைகொண்டிருந்த மிகச்சிறிய காட்டுக்குள் இருந்து, ஞாயிறு பின்னிரவு அவர் எனக்குக் கூறினார்.
இயந்திரத் துப்பாக்கிச் சத்தங்களைப் பின்புறத்தில் என்னால் கேட்க முடிந்தது.

“ஓபாமா நிர்வாகம் மற்றும் பிரித்தானியா அரசிடம் இருந்து எங்களின் பாதுபாப்புக்கான உத்தரவாதத்தை எதிர்பார்க்கிறோம். எங்கள் பாதுகாப்புக்கான உத்தரவாதம் ஏதேனும் உள்ளதா?”

26 வருட புலிகளுக்கும் சிறிலங்கா சிங்களவர்களுக்கும் இடையான போரில், வெற்றியோடுள்ள சிறிலங்கா இராணுவத்திடம், சரணடைவது மிக அபாயமானதென்று அவருக்கு நன்றாகவே தெரிந்துள்ளது.

8 வருடங்களுக்கு முன்பே நடேசன் மற்றும் புலித்தேவன் அவர்களை எனக்குத் தெரிந்திருந்தது. அப்போது தீவின் 3இல் 1 பங்கு புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இப்போது, இவ்விரண்டு பேரும் தங்களோடு இருந்த ஏனைய 300 போராளிகளையும் அவர்களது குடும்பங்களையும் (பலர் காயமடைந்திருந்தார்கள்) காப்பாற்றுவதற்காக முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள். பல்லாயிரக்கணக்கான பொது மக்களும் கையால் தோண்டிய குழிகளுக்குள் அவர்களோடு பதுங்கியிருந்தனர்.

கடந்த பல நாட்களாகவே புலிகளின் தலைமைக்கும், மற்றும் ஐ.நாவுக்கும் இடைப்பட்ட மத்கியஸ்தராக நான் இருந்து கொண்டிருந்தேன். நடேசன் என்னிடம் 3 விடயங்களை ஐ.நாவுக்குப் பறிமாறுமாறு கேட்டுக்கொண்டார்: நாங்கள் ஆயதங்களைக் கீழே போடுவதாகவும், தங்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா தர வேண்டுமென்றும், மற்றும் ஒரு அரசியல் தீர்வு தமிழர்களுக்கு வைக்கப்படும் என்ற நிச்சயம் வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

உயர்ந்த பிரித்தானியா மன்றும் அமெரிக்கா அதிகாரிகளுக்கூடாக நான் கொழும்பில் இருந்த ஐ.நா.விசேட தூதுவர், விஜய் நம்பியாரோடு தொடர்பு கொண்டேன். புலிகளின் சரணடைதலுக்கான கோரிக்கைகளை நான் அவருக்கு தெரியப்படுத்தினேன். அவரும், தான் அதை சிறிலங்கா அரசுக்குத் தெரிவிப்பதாகக் கூறினார்.

இந்த நடவடிக்கை ஒரு சமாதானம் வருவதற்கான அறிகுறியாக எனக்குத் தோன்றியிருந்தது. எப்போதுமே கலகலப்பாக இருக்கும் புலித்தேவன் பதுங்குகுழிக்குள் இருந்தவாறு சிரித்த முகத்துடன் ஒரு படத்தை தொலைபேசியில் எடுத்து எனக்கு அனுப்பியிருந்தார்.

கடைசி ஞாயிறு இரவின்போது, சிறிலங்கா இராணுவம், மிக நெருங்கிய போது, புலிகளிடன் இருந்து, ஒரு அரசியல் கோரிக்கைகளும் புகைப்படங்களும் இருக்கவில்லை. நடேசன் சரணடைதல் என்ற சொல்லைப் பாவிக்க மறுத்தார். ஆனால் அவர் என்னை அழைத்தபோது அதைத்தான் செய்ய முன்வந்திருந்தார். புலிகளின் பாதுகாப்புக்கு நம்பியாரின் வருகை வேண்டுமென்றும் கேட்டார்.

திரும்பவும், நியுயோர்க் 24 மணி நேரமும் இயங்கும் அவசரபிபிரிவு ஊடாக நம்பியாரைத் தொடர்பு கொண்டேன், அப்போது அங்கே காலை 5:30 ஆக இருந்தது. புலிகள் ஆயதங்களைக் கீழே போட்டுவிட்டார்கள் என்று அவரிடம் கூறினேன்.

அவரும் தான் நடேசன் மற்றும் புலித்தேவனின் சரணடைதலின் பாதுகாப்பை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடன் நிச்சயமாக்கிக்கொண்டதாகவும் கூறினார். அவர்கள் வெள்ளைக் கொடியைப்பிடித்து வந்தால் சரியென்றும் கூறினார். சரணடைதலின் சாட்சிக்கு நம்பியாரும் வடக்குக்குப் போகத்தேவையில்லையா என்று நான் அவரிடன் கேட்டேன். அதற்கு அவசியமில்லையென்றும், வெள்ளைக் கொடியை உயர்த்திப்பிடிக்கும்படியும் நம்பியார் கூறினார்.

லண்டனில் அபபோது நேரம் ஞாயிறு பின்னிரவு. நடேசனின் தொலைபேசிக்கு அழைக்க முயற்சியெடுத்துத் தோல்வியடைந்தேன். தென் ஆப்பிரி;காவில் உள்ள ஒரு தொடர்புக்கு அழைத்து நம்பியாரின் செய்தியைத் தெரிவித்தேன்: வெள்ளைக் கொடியைத் தாங்கிச் செல்லவும்.

தென்ஆசியாத் தொடர்புடன் இருந்து திங்கள் காலை 5 மணிக்கு எனக்கு அழைப்பு வந்தது. அவருக்கு நடேசனைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. “நான் நினைக்கிறேன் எல்லாமே முடிந்து விட்டது அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று”.
அன்று மாலை, சிறிலங்கா இராணுவம் அவர்களது உடல்களைக் காட்டியிருந்தார்கள். சரணடைதலின் போது பிழையாகப் போனது என்ன? விரைவில் நான் கண்டுபிடிப்பேன்.

ஞாயிறு இரவு தமிழ் பாராளுமன்ற உறுப்பனரான றோகன் சந்திர நேருவையும் நடேசன் தொடர்பு கொண்டுள்ளார் எனத் தெரிந்துகொண்டேன். சுந்திர நேரு உடனடியாக ராஜபக்ஸவுடன் தொடர்பு கொண்டுள்ளார்.

பிந்திய மணித்தியாலங்களில் நடந்தவற்நை பாராளுமன்ற உறுப்பினர் கூறினார். “ஜனாதிபதி தானே கூறியிருந்தார் நடேசனுக்கும் அவர் குடும்பத்துக்கும் முழுப் பாதுகாப்பு தருவதாக உறுதியளித்திருந்தார்”. தன்னோடு 300 மக்கள் உள்ளார்கள் என நடேசன் கூறியிருந்தார், சிலர் காயப்பட்டும் இருந்தார்கள்.

“நான் ஜனாதிபதிக்குக் கூறினேன்: ‘நான் நேரில் போய் அவர்களது சரணடைதலை ஏற்கிறேன்’.

“ராஜபக்ஸ கூறினார்: ‘இல்லை, எங்கள் இராணுவம் மிகவும் பெருந்தன்மையும் கட்டுப்பாடுமுடையது. நீங்கள் போர் இடத்துக்குச் சென்று உங்கள் வாழ்க்கையை இடருக்குள் வைக்கத் தேவையில்லை’.

பாசில், ஜனாதிபதியின் சகோதரர், தன்னை அழைத்துக் கூறினார் என்று சந்திர நேரு கூறினார். ‘அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள், அவர்கள் வெள்ளைக் கொடியை ஏற்றவேண்டும்’ மற்றும் அவர்கள் தொடர வேண்டிய பாதையையும் அவர் கூறினார்.

சந்திர நேரு நடேசனை காலை 6:20 மணிக்குத் தொடர்புகொண்டார். துப்பாக்கிச் சூட்டின் சத்தம் இப்போது இன்னும் கூடிய சத்தமாக இருந்தது.

“நாங்கள் தயார்”. நடேசன் அவருக்குக் கூறினார். “நான் வெளியே நடந்து சென்று வெள்ளைக் கொடியை ஏற்றிப்பிடிக்கப்போகிறேன்.”

“நான் கூறினேன்: ‘கொடியை உயர்த்திப்பிடி சகோதரனே-அவர்களுக்குத் தெரிய வேண்டும். நான் உன்னை மாலையில் சந்திக்கிறேன்’,” சந்திர நேரு கூறினார்.

கொலையிடத்தில் இருந்து தப்பித்த கூட்டத்துக்குள் இருந்த ஒரு தமிழர் அதன்பின்

என்ன நடந்தது என்றதை விவரித்தார். இவர் பின்பு ஒரு உதவிப் பணியாளரோடு கதைக்கும்போது கூறினார், “நடேசனும் புலித்தேவனும், ஆண்களும் பெண்களுமுள்ள கூட்டத்தோடு, வெள்ளைக் கொடியோடு சிறலங்கா இராணுவத்தை நோக்கி நடந்து வந்தார்கள். இராணுவம் அவர்களை நோக்கி இயந்திரத் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார்கள்”.

“நடேசனின் மனைவி, ஒரு சிங்களப் பெண்மணி, சிங்களத்தில் கத்தினார்: “அவர் சரணடைவதற்கு வருகிறார், ஆனால் நீ அவர்களைச் சுடுகிறாய்”. மனைவியும் சுடப்பட்டார். சரணடைய வந்த சகலருமே கொல்லப்பட்டார்கள்.” அத்தமழ் நபர் இப்போது தனது உயிருக்குப் பயந்து ஒழிந்துகொண்டுள்ளார். ஜனாதிபதியாலும் அவர் சகோதரராலும் விரட்டப்பட்டதால் சந்திர நேரு இப்போது நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக, ஐ.நாவின் தூதுவராக, நம்பியாரின் பங்கு கேள்விக்குள்ளாகியுள்ளது. அவரின் சகோதரர், சரிஷ், 2002 ஆம் ஆண்டிலிருந்து சிறிலங்கா இராணுவத்துக்கு ஆலொசகராக இருந்துள்ளார். சிறிலங்கா இராணுவத்தின் தலைமைக் கட்டளை அதிகாரி, சரத் பொன்சேகாவுக்கு ஒரு சிறந்த இராணுவத் தலைவனின் தன்மைகள் உள்ளன என்று சரிஷ் ஒரு தடவை எழுதியுள்ளார்.

சில பயங்கரவாத நடவடிக்கைகளால் புலிகள் சர்வதேசத்தால் தடைசெய்யப்பட்டிருந்தாலும், நடேசனும் புலித்தேவனும், தமிழர் உரிமைப் பிரச்சினைககு ஒரு அரசியல் தீர்வையே விரும்பியிருந்தார்கள். உயிரோடு இருந்திருந்தால், அவர்கள் தமிழர்களுக்கு நம்பிக்கையான அரசியல் தலைவர்களாகியிருப்பார்கள்.

த ரைம்ஸ் - மேரி கொல்வின்






Taken from :: www.pathivu.com

0 comments

Leave a Reply

Visit : Click Here to Know the Latest News

Copyright 2011 BoffinNews All rights reserved.