•  
     
     
     
     
     
     
     
     
     
     
     

தமிழ் ஈழம்





சிறப்புச் செய்திகள்







இலங்கையில் போர் முடிந்துவிட்டதாக நினைக்கிறீர்களா? சீ.என்.என் வாக்கெடுப்பு
[ Wednesday, 20 May 2009, 06:53.05 AM ]
இலங்கையில் போர் முடிந்துவிட்டதாக நினைக்கிறீர்களா? என சீ.என்.என் வாக்கெடுப்பு ஒன்றை ஆரம்பித்துள்ளது.





தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் அதிகாரப்பகிர்வு ஒன்று அவசியம்: அமெரிக்கா கொழும்புக்கு அழுத்தம்
[ Wednesday, 20 May 2009, 05:56.05 AM ]
தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் அதிகாரப்பகிர்வு ஒன்று அவசியம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா இலங்கை அரசாங்கத்திடம் வலியறுத்தியுள்ளது.




எத்தகைய சூழ்நிலையிலும் மனம் தளராது நிமிர்ந்து நிற்போம்.
[ Tuesday, 19 May 2009, 03:13.53 PM ]
இலட்சிய வேங்கைகள் இறப்பதும் இல்லை விடுதலைப்புலிகள் வீழ்வதும் இல்லை





தேவையான நேரத்தில் தலைவர் பிரபாகரன் மக்கள் முன் வருவார்
[ Tuesday, 19 May 2009, 01:54.02 PM ] []
1988/89 இல் இறந்த தலைவர் 90 இறுதி வரை இறந்தவராக இருந்தபடியால் தான் எம்மால் அவரை பின்னர் காண முடிந்தது. அதேபோல்.. இப்போது இறந்ததாகச் சொல்லப்படும் தலைவர் இறந்ததாகவே இருக்கட்டும்.





தலைவர் பிரபாகரனின் இறந்த உடல்: பல சந்தேகங்கள்
[ Tuesday, 19 May 2009, 11:16.45 AM ]
தலைவர் பிரபாகரனின் கொல்லப்பட்டு விட்டதாக அவரைப்போன்று ஒரு உருவ அமைப்புடைய இறந்த உடலை இலங்கை தொலைகாட்சிகளில் ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றது.




தலைவர் பிரபாகரன் நலம்; மூத்த உறுப்பினர்கள் பலர் வஞ்சகமாக கொல்லப்பட்டுள்ளனர்": செ.பத்மநாதன்
[ Tuesday, 19 May 2009, 05:32.04 AM ]
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாகத் தெரிவித்திருக்கும் அந்த இயக்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன், ஆனால், தூரதிர்ஷ்டவசமாக தமது இயக்கத்தின் பல மூத்த உறுப்பினர்கள் வஞ்சகத்தனமாகக் கொல்லப்பட்டிருக்கின்றனர் எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.





பிரபாகரன் நலமுடன் இருக்கிறார்: பழ.நெடுமாறன் பேட்டி
[ Tuesday, 19 May 2009, 01:45.18 AM ]
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு தொலைக்காட்சி சொல்லிவருகிறது. இதனால் உலகத்தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சி நிலவுகிறது.
 




முள்ளிவாய்க்காலில் சிறிலங்காவின் திட்டமிட்ட அதிர்ச்சிகரப் படுகொலை
[ Monday, 18 May 2009, 06:53.54 PM ]
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் சிங்களப் படையினரின் முற்றுகைத் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்து உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்த பொதுமக்களையும் போராளிகளையும் பாதுகாக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று அதிகாலை வரை உலக சமூகம் மற்றும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புக்களிடமும் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று காலை அந்த பகுதிக்குள் புகுந்த சிங்களப் படையினர் பாரிய இரத்தக் களரியை ஏற்படுத்தியிருக்கின்றனர்.





சிறிலங்கா படையினரின் முற்றுகையை உடைத்து தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வெளியேறினார்?
[ Monday, 18 May 2009, 02:09.26 PM ]
பெரும் வல்லரசுகளின் ஆயுத மற்றும் தொழில்நுட்ப உதவியோடும், இந்தியப் படையினரின் நேரடிப் பங்களிப்போடும் தமிழினத்தையும் தமிழர்களின் தலைமையையும் அழிப்பதற்கு போர் தொடுத்துள்ள சிறிலங்கா அரசின் இறுக்கமான முற்றுகையை உடைத்துக் கொண்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேறு ஒரு தளத்திற்கு சென்று விட்டதாக உறுதிப்படுத்தமுடியாத செய்திகள் தெரிவிக்கின்றன.





புலிகளின் தலைவர் பிரபாகரன் இறுதிக்கட்ட போரில் உயிரிழப்பு : இராணுவம் பொய் பிரசாரம்
[ Monday, 18 May 2009, 01:40.30 PM ]
விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட இறுதிக்கட்ட போரில் உயிரிழந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிறிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.




வதந்திகளை நம்பவேண்டாம் பொறுமை காக்குமாறு வேண்டுகோள்
[ Monday, 18 May 2009, 12:53.02 PM ]
தமிழ் மக்களுக்கு பாதகமான பல தகவல்களை சிங்கள படையினர் பரப்பிவருவதனால் தமிழ் மக்களை வதந்திகளை நம்பாமல் பொறுமை காக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





எரியுண்ட நிலையில் சடலம் : விடுதலைப் புலிகளின் தலைவராக இருக்கலாம் எனப் பாதுகாப்பு அமைச்சகம் சந்தேகம்?
[ Monday, 18 May 2009, 12:47.32 PM ]
இலங்கைப் பாதுகாப்பு படையினர் விடுதலை புலிகளிடமிருந்து நாட்டை விடுவித்துள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.




துப்பாக்கிப் பயன்பாடுகளை தாம் நிறுத்தப் போவதாக விடுதலைப்புலிகள் முடிவு: புலிகளின் பேச்சாளர் செ.பத்மநாதன்
[ Sunday, 17 May 2009, 10:48.34 AM ]
வன்னியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களை மரணத்தின் பிடியில் இருந்து பாதுகாக்குமாறு உலகத்தை நாம் கேட்டுக்கொண்ட போதிலும் அனைத்துலக சமூகத்தின் மெளனம்தான் சிறிலங்கா இராணுவம் தனது இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்க ஊக்குவித்தது கசப்பான முடிவுக்கே கொண்டு சென்றுள்ளது என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செ.பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார்.





வன்னியில் காயமடைந்துள்ள 25,000 பொதுமக்களையும் காப்பாற்றுமாறு சர்வதேசத்திடம் வேண்டுகோள்: கடற்புலிகள் தளபதி கேணல் சூசை
[ Sunday, 17 May 2009, 10:14.13 AM ] []
வன்னியில் சிறிலங்கா படையினரின் கண்மூடித்தனமான ஆட்லறித் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை எதுவுமின்றி சாவின் விளிம்பில் தவித்துக்கொண்டிருக்கும் 25,000 பொதுமக்களையும் காப்பாற்ற உதவுமாறு தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் விசேட தளபதி கேணல் சூசை சர்வதேசத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.





சிறிலங்காப் படையினரின் தொடர் குண்டு மழையினால் மரண பூமியாக மாறியுள்ள முள்ளிவாய்க்கால்
[ Sunday, 17 May 2009, 04:17.18 AM ]
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியை நான்கு புறங்களிலும் சுற்றிவளைத்துள்ள சிறிலங்கா படையினர் பொதுமக்கள் மிகவும் அடர்த்தியாக வசிக்கும் சிறிய பகுதி மீது இடைவிடாது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி குண்டுகளைப் பொழிந்து கொண்டிருப்பதாக இன்று காலை அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.




தொடரும் அகோர எறிகணைத் தாக்குதல்: முள்ளிவாய்க்கால் பகுதியில் சிதறிக்கிடக்கும் 3,000 பொதுமக்களின் உடலங்கள்
[ Saturday, 16 May 2009, 03:19.01 PM ]
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்கள் மிகவும் செறிவாக வசிக்கும் பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்டுள்ள கொடூர தாக்குதலில் கொல்லப்பட்ட 2,000 தொடக்கம் 3,000 வரையிலான பொதுமக்களின் உடலங்கள் அந்தப் பகுதிகளில் பரவலாக சிதறிக் கிடப்பதாக மருத்துவத் தொண்டர் ஒருவரை ஆதாரம் காட்டி 'தமிழ்நெட்' இணையத்தளம் செய்தி வெளியிட்டிருக்கின்றது.





விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் கடலோரத்தில் இருந்த கடைசிப் பகுதியையும் கைப்பற்றிவிட்டதாக இலங்கை இராணுவம் அறிவிப்பு
[ Saturday, 16 May 2009, 09:36.21 AM ]
இலங்கையின் வடகிழக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் கடலோரத்தில் இருந்த கடைசிப் பகுதியையும் கைப்பற்றிவிட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.




வன்னியில் பாரிய மனித அழிவு ஒன்று குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது. - வைத்தியர்
[ Friday, 15 May 2009, 06:48.23 PM ] []
மனிதாபிமான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் வன்னியில் பாரிய அழிவு ஒன்றை தடுக்கமுடியாது போய் விடும் என வைத்தியர் ஒருவர் இன்று மாலை தெரிவித்துள்ளார்.





தரை, கடல், வான் வழியாக படையினர் பெரும் தாக்குதல்: நாலா பக்கமும் கடும் சமர்; வீதி எங்கும் நூற்றுக்கணக்கில் தமிழர் உடலங்கள்; காயமடைந்தோர் கதறல்
[ Friday, 15 May 2009, 03:57.27 PM ]
வன்னியில் பாதுகாப்பு வலயம்'  மீது இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் தரை, வான் மற்றும் கடல் வழியான கடுமையான தாக்குதலினை சிறிலங்கா படையினர் தொடங்கியுள்ளனர். தரையில் நான்கு முனைகள் ஊடாகவும், கடல் வழியாகவும் உள்ளே நுழையும் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மிக நெருக்கமான சண்டைகள் பலமுனைகளில் நடைபெறுகின்றன.





'மக்கள் பாதுகாப்பு வலயம்' கொலைக்களமாக எரிந்து கொண்டிருக்கிறது: உயிரிழந்த மக்களின் உடலங்கள் வீதிகளில் சிதறிக் கிடக்கின்றன. அனைத்துலக தொடர்பக பேச்சாளர் திலீபன்
[ Friday, 15 May 2009, 12:26.22 PM ] []
'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது சிறிலங்கா படையினர் தற்போது நடத்திக்கொண்டிருக்கும் கண்மூடித்தனமான தாக்குதல்களால் அப்பகுதியில் பெருமளவான மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் அப்பகுதி தொடர்ந்தும் எரிந்துகொண்டிருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பக பேச்சாளர் திலீபன் தெரிவித்துள்ளார்.

0 comments

Leave a Reply

Visit : Click Here to Know the Latest News

Copyright 2011 BoffinNews All rights reserved.