| [ புதன்கிழமை, 22 யூலை 2009, 05:08.14 PM GMT +05:30 ] |
அங்கு அடைபட்டுள்ள 59 ஈழத்தமிழர்கள் இவ்வுண்ணாநோன்பினை ஆரம்பித்தது மட்டுமன்றி, வெகுசீக்கிரத்தில் நம்மை விசாரணைக்குட்படுத்தி விடுதலை செய்யுமாறும், விடுதலை செய்யும்பட்சத்தில் நம்மை இலங்கைக்கு திருப்பி அனுப்பாது இந்தியாவிலேயே நாம் வாழ தஞ்சம் கோருவதாகவும், தமக்கு புகலிடம் வழங்குமாறும் இந்நோன்பினை ஆரம்பித்துள்ளனர் என "ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக இளந்தமிழர் இயக்கம் விடுத்துள்ள அவசர வேண்டுகோள் தெரிவிப்பதாவது:- சென்னை செங்கல்பட்டில் ஈழ அகதிகளுக்கான சிறப்பு முகாம் ஒன்று உள்ளது. 1993 ஆம் ஆண்டு இம்முகாம் தொடங்கப்பட்டது. தமிழீழ மக்களுக்கான அரிசி, பருப்பு உள்ளிட்ட இன்றியமையாப் பொருட்களும் மருந்துகளும் அனுப்ப முயன்றாதாக “குற்றம்”சாட்டப்பட்டவர்கள் உட்பட சுமார் 85 பேர் இம்முகாமில் தற்பொழுது அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள வதை முகாம் இது என்றும், சிங்களர்களை விட இங்குள்ள தமிழ்நாட்டு அரசு தங்களைக் கொடுமையாக நடத்துவதாகவும் முகாமில் உள்ள ஈழத்தமிழர்கள் வேதனையுடன் கவலைத் தெரிவித்து இது குறித்து நமக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். பிணையில் சிறையிலிருந்து இவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தாலும் கூட, தமிழக அரசு சிறையிலிருந்;து வெளிவந்தவர்களை வெளியில் விடாமல் தனி முகாமிட்டு மீண்டும் மறைமுகமாக சிறைப்படுத்தி இம்முகாமில் வைத்திருக்கிறது. இவர்களில் பலருக்கு வழக்கு முடிந்து விட்ட போதும் முகாம் அதிகாரிகள் அவர்களை வெளியில் விடாமல் சட்டத்திற்கு புறம்பான வகையில் அவர்கைள சிறைப்படுத்தி வைத்துள்ளனர். வழக்கு முடியாதவர்கள் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அவ்வழக்கை தனியாக நடத்தவும், அதற்கான ஒத்துழைப்பை அரசிற்கு நிச்சயம் அளிப்போம் என்றும் உத்திரவாதமும் தருகின்றனர். மேலும், அம்முகாமில் உள்ள பலர் தங்கள் உறவுகளை அண்மையில் நடந்த ஈழப்போரின் போது இழந்துள்ளனர். அதில் பாதிக்கப்பட்டு பலர் மனநோயாளிகளாகவும் மாறிவிட்டனர் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்ன்றன. தற்பொழுது நோயாளிகளாக உள்ளவர்களைத் தவிர மிதம் உள்ள 60 பேர் தங்களை விடுவிக்கக் கோரி முகாமிற்குள்ளேயே காலையிலிருந்து காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஞாயமான அவர்களது இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாலை சென்னை சைதாப்பேட்டையில் தமிழர் ஒருங்கிணைப்பு சார்பில் நடத்தப்பட்ட கலந்தாய்வுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் த.செ.மணி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, பத்திரிக்கையாளர் திரு. அய்யநாதன் உள்ளிட்டோர் அக்கூட்டத்தில் கலந்து கொண்டு தீர்மானத்தை வழிமொழிந்துள்ளனர். இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு உரிமைகளை மீட்டுத் தருவோம் என்று உறுதி கூறும் தமிழக அரசு, அவ்வுரிமைகளை முதலில் தனது அரசின் கீழ் உள்ள ஈழத்தமிழ் அகதிகளுக்கு அளிக்க வேண்டும். எனவே, தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அகதிகளை முகாமிலிருந்து விடுவிக்க வேண்டும் என இளந்தமிழர் இயக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதோடு, மேலும், முகாமிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்ட பின்னர் அவர்களுக்குத் தகுந்த வாழ்வாதாரங்களையும் தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும் இளந்தமிழர் இயக்கம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. |
Boffin News | Daily India News | India Live News | News Papper from India | India Current News | Latest India News | India News | Current India News | India Abroad News | Indian Abroad News | Today India | Online India News| Indian Latest News | Indian News Online | India Headlines Today | Indian News WebSites | Website News From India | World Current News India
Pages
▼
No comments:
Post a Comment
Visit : Click Here to Know the Latest News