| தயான் ஜயதிலக்க அவரின் தூதுவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் தான் நேரடியாகப் பேச இருக்கிறார் என டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தில் இருந்து ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் கடும் குற்றச்சாட்டுக்கள் கொண்டுவரப்பட்டன. அவற்றைத் தடுப்பதற்குத் தயான் ஜயதிலக்க எடுத்த நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்த அரசு அவரை அண்மையில் பதவியில் இருந்து திடீரெனத் திரும்ப அழைத்துக்கொண்டது. தயான் ஜயதிலக அவரது இராஜதந்திரப் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டதன் பின்னணி காரணங்கள் தனக்குத் தெரியாது என்று கூறிய அமைச்சர் டக்ளஸ், இருந்தபோதும் இது பற்றி ராஜபக்சவை சந்திக்கும்போது தான் நிச்சயம் பேச இருக்கிறார் என்றும் தெரிவித்தார். |
Boffin News | Daily India News | India Live News | News Papper from India | India Current News | Latest India News | India News | Current India News | India Abroad News | Indian Abroad News | Today India | Online India News| Indian Latest News | Indian News Online | India Headlines Today | Indian News WebSites | Website News From India | World Current News India
Pages
▼
No comments:
Post a Comment
Visit : Click Here to Know the Latest News