Pages

Jun 26, 2010

கலைஞர்தான் தமிழுக்கு காப்பு ; மாநாட்டு கவியரங்கில் கவிஞர் வாலி புகழ்மாலை

கோவை : கோவையில் நடந்துவரும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு 4 ம் நாள் சிறப்பு கவியரங்கம் கவிஞர் வாலி தலைமையில் துவங்கியது. தமிழுக்கு அமுதென்று பேர் என்ற தலைப்பில் நடந்த இந்த கவியரங்கில் கவிஞர் மேத்தா, கவிஞர் பா.விஜய், கவிஞர். பழனிபாரதி, கவிஞர் தணிகைச்செல்வன், கவிஞர் இளம்பிறை, கவிஞர் உமாமகேஸ்வரி, தமிழ்தாசன் ஆகியோர் கவிதை படித்தனர். கவியரங்கில் கவிஞர் வாலி தனது கவியுரையில் கலைஞர் தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல, தமிழுக்கும் அவர்தான் காப்பு என்றார்.

விறகு நான் உன் அருள் வந்த பிறகு வீணையானேன்,
செந்தமிழே உன்னால் நான் விமானம் ஆனேன்,
மூப்பெய்த முதல் தமிழே , போன வாரம்
பூப்பெய்த பெண்போல இருக்கின்றாய் !
எய்த இடம் வேடம்போல் ஆவேன் !
நீ விட்டு விட்டால் கை விட்ட ஈழம் போல் ஆவேன்!
தமிழா, தமிழா என்று அழைத்த நமக்கு தாய் தந்தாள் யாக்கை
நம் இருவருக்கும் தமிழால் வந்தது வாழ்க்கை !
கோபாலபுரத்தில் இருந்து ஒரு கோமகன் கூப்பிட
அடுத்த வினாடி தரணிதமிழே வருகிறது தமிழ்சோறு சாப்பிட
அன்பொழுக அழைக்கும் கலைஞர் குரல் கேட்டு குதிக்கிறது
அது குரல் அல்ல ., குறள்.,
பரிமேலழகர் உறைக்குள் உட்காராமல் ,
கோட்டை அறைக்குள் அமர்ந்திருக்கும் வள்ளுவர்,
அமுது தமிழை பேணுவதில் ஆருமே அவருக்கு அப்பால்
புனைந்தானய்யா ஒரு பாட்டு ! அதில் புகட்டினான்
செம்மொழி மாநாட்டின் மைய நோக்கு !
அது ஈர்த்தது வையநோக்கு !
சோவுக்கு மட்டும் அதில் ஒரு ஐய நோக்கு !
காது கொடுத்து கேட்டேன் பாட்டை
அது அசத்திக்கொண்டிருக்கிறது நாட்டை !
செல்லோடு சென்றாலும் அது செல்லரிக்காத பாட்டு என்றால்
புல்லரிக்காதா கேட்டு !
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு இன்னாரு ஆஸ்கார் !
தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல , தமிழுக்கும், தமிழ் மண்ணுக்கும்
கலைஞர்தான் காவல் !
அதனால்தான் அவரது நிழலில் ஒதுங்க அனைவருக்கும் ஆவல் !
ஆலயம் தானே சாமிகளுக்கு இடம் !
ஆனால் சாமிகள் ( ஈரோடு முத்துச்சாமி, கரூர் சின்னச்சாமி ) அறிவாலயம் நோக்கி வருகின்றன !
கலைஞர்தான் தமிழுக்கு காப்பு ! அவருக்கு ஒரு கை கூப்பு !

No comments:

Post a Comment

Visit : Click Here to Know the Latest News