அம்பாறை மத்தியமுகாம் 4ம் கொலணி வாணி வித்தியாலய 7ம் வகுப்பு மாணவி மோகன் மதுனுஸ்கா (வயது 12)கடந்த 22ம் திகதி புதன்கிழமை அன்று குரூரமான முறையில் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார்.
அவர் சம்பவதினம் முட்டை விற்பதற்காக அருகிலுள்ள சிங்களக் கிராமமான 3ம் கொலனிக்குச் சென்றுவிட்டு, வரும் வழியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாலை ஆறு மணியாகியும் அவர் திரும்பி வராததால் சந்தேககம் கொண்ட பெற்றோர் அவரைத் தேடத் தொடங்கினர்.
இதேவேளை மத்திய முகாம் எல்லைக்கிராமத்திலுள்ள பாமடி பின் அணைக்கட்டுப் பகுதியில் ஆடைகளில்லாத நிலையில் முகம் உள்ளிட்ட உடம்பு பூராகக் கீறல் காயங்களுடனும் வயிற்றிலும் கழுத்திலும் கத்திக் குத்துக் காயங்களுடனும் குடல் வெளியே தெரிந்த நிலையில் சடலமொன்று காணப்படுவதாகத் தகவல் கிடைத்தை தொடர்ந்து, பெற்றோரும் மத்திய முகாம் பொலிஸாரும் அயலவர்களும் சென்று பார்த்தபோது சடலத்தின் மேல் பறாங்கல் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. குறித்த மாணவியின் சடலமே அது என்பதை அவர்கள் உறுதிப்படுத்திக் கொண்டனர்.
இதனையடுத்து மத்தியமுகாம் 3ஆம் 4ஆம் கொலனிகளில் பதற்றம் நிலவி வருகிறது. பாடசாலை மாணவர்களின் வரவிலும் வீழ்ச்சி கண்டுள்ளது.
தற்போது அப்பகுதி எங்கும் காவற்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மோப்ப நாய் சகிதம் அவர்கள் தேடுதல் மேற்கொண்டு வருவதோடு பலரை விசாரணைக்குட்படுத்தியும் வருகின்றனர்.
அரசாங்கத்தால் புலிகளிடமிருந்து முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக இளம் சிறுமிகள் பாலியல் வல்லுறுவுகட்குள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டு வரும் சம்பவங்கள் தொடர்வதும், இது வரை இச்சம்பவங்களின் சூத்திரதாரிகளை காவற்துறையினர் இனம் காணாமல் இருப்பதும் காவற்துறை மீது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அப்பிரதேச மனித உரிமைச் செயற்பாட்டாளர் தெரிவித்தார்.
இப்பாலியல் கொலையுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளி பாவா என அழைக்கப்படும் கனகரெத்தினம் ஸ்ரீஸ்கந்தராஜா (வயது 29)என்பவர் நேற்று மாலை 5.00 மணியளவில் பொதுமக்களால் அடித்து நையப்புடைக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
பெண் வேடம் தரித்து முக்காட்டுடன் வயலில் கதிர் பொறுக்கிக் கொண்டிருந்த வேளை அவரை இனங்கண்ட தமிழ் சிங்கள பொது மக்கள் ஆத்திரம் தீர அடித்துள்ளனர்.அதன்போது இவா’ இறந்துள்ளார். சுடலத்தை பொலிசார் எடுத்துச் சென்றனர்.
இன்று அவரது சடலம் ஆயிரக்கணக்கான தமிழ் சிங்கள பொது மக்கள் கண்ணீருக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்டது.       
|
No comments:
Post a Comment
Visit : Click Here to Know the Latest News