அரசியல் முன்னெடுப்பு தொடர்பில், நாடு கடந்த அரசாங்கத்தை நிறுவுவதற்கான குழுவின் தலைவராக சட்டத்தரணி விஸ்வநாதன் உருத்திரகுமாரன் நியமிக்கப்பட்டுள்ளமையை பாராட்டுவதாகவும் அது தெரிவித்துள்ளது.
இந்த குழு, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் வாழ்கின்ற தமிழர்களின் நலனுதவிகள், கலாசார மற்றும் அரசியல் பாதுகாப்பு தொடர்பில் செயற்பட வேண்டும் என இந்த அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.