தந்திரிமலை பிரதேசத்தில் உள்ள காவலரண் மீது விடுதலைப்புலிகளின் மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் ஒன்றில் இரண்டு ஊர்காவல்ப் படையினர் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. |
சம்பவம் இடம்பெற்ற போது, அங்கு 4 ஊர்காவற் படையினர் மற்றும் ஒரு காவற்துறை சிப்பாய் ஆகியோர் கடமையில் இருந்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்புத் தேடுதலில் 15 மெலிபன் பிஸ்கட் பக்கெட்டுகள் மீட்கப்பட்டுள்ளன. வன்னி மற்றும் முல்லைத்தீவு காடுகளில் சிறிய குழுக்களாக இருக்கும் விடுதலைப்புலிகளின் அணிகள், மறைந்திருந்து தாக்குதல்களை நடத்துவதாக இராணுவத் தரப்புச் செய்திகள் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகளை முழுமையாக அழித்து, நாட்டை முற்றாக கைப்பற்றியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ள போதிலும், விடுதலைப்புலிகளின் அணி அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் இதனால் படையினர் உயிரிழப்பதாகவும் இராணுவத்தின் உட்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. |