தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வான் படைத் தளபதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வவுனியாவில் உள்ள இடைத்தங்கல் முகாம் ஒன்றில் தங்கியிருந்த போது குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படை இரகசியகள் பலவற்றை குறித்த நபர் வெளியிட்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள விடுதலைப் புலி விமானிகள் பலரை விரைவில் கைது செய்ய முடியும் என காவல்துறையினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், அவரது பெயர் விபரங்கள் தற்போதைக்கு வெளியிடப்பட மாட்டாது எனவும்