இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையுடன், விடுதலைப்புலிகளின் அனைத்துலக தொடர்பாளர் செல்வராஜா பத்மநாதனக்கும் தொடர்பிருப்பதாகவும், அவரை விசாரணை செய்வதற்கான அனுமதியை இந்திய உள்துறை அமைச்சு கோரலாம் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
ராஜீவ் காந்தியின் கொலையாளிக்கு தேவையான பணம், ஆயுதங்கள், வெடிபொடுட்களை, பத்மநாதனே வழங்கியதாக தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்திய உள்துறை அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் நேற்று, இதனை தெரிவித்திருப்பதாக 'இந்துஸ்த்தான் ரைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
பத்மநாதனை கைது செய்ய நீண்டநாள் திட்டம் - ஒத்துழைப்பு வழங்கிய நாடுகளுக்கும் நன்றி! - அரசு
இதேவேளை பத்மநாதனை கைது செய்வதற்கு, விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்பான அறிவை கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவொன்று, பல நாட்கள் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் அந்தக்குழுவின் முயற்சி வெற்றி பெற்றுள்ளதாகவும், பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
தற்போது பத்மநாதன் வழங்கிய தகவல்களின் படி விடுதலைப்புலிகள் அமைப்பில் மீதமுள்ள பிரதான தலைவர்கள், விஸ்வநாதன் உருத்திரகுமார் மற்றும் இளையதம்பி ஆகியோரையும் சிக்க வைப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குமரன் பத்மநாதன கைது செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு உலக நாடுகளிடம் சிறிலங்கா அரசாங்கம் விடுத்த கோரிக்கையை நட்பு நாடுகள் ஏற்றுக்கொண்டதாகவும், அதனால், அந்நாடுகளுக்கு நன்றி கூறுவதாகவும் சிறிலங்கா அரசு தெரிவித்திருக்கிறது.