தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் திரு கே.பத்மநாதன் அவர்கள் மீதான சர்வதேச விதிகளுக்கெதிரான கைது நடவடிக்கையைக் கண்டித்தும், பிரான்சில் மலேசிய தூதரகம் அமைந்துள்ள பகுதியில் கண்டன ஒன்றுகூடல் நடைபெற்றுள்ளது.
பிரான்சு வாழ் தமிழ்மக்களால் ஒழுங்கு செய்யப்பட்ட கண்டன ஒன்று கூடல் 21.08.2009 வெள்ளிக்கிழமை 15.30 மணிக்கு அக வணக்கத்துடன் ஆரம்பமானது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் திரு கே.பத்மநாதன் அவர்கள் மீதான சர்வதேச விதிகளுக்கெதிரான கைது நடவடிக்கையைக் கண்டித்தும்,
மலேசிய அரசு இலங்கை அரசிற்கு வழங்கி வரும் உதவிகளை நிறுத்தக் கோரியும்,
முகாம்களில் அமைத்த வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியும்
பெருமளவிலான மக்கள் இந்த கண்டன ஒன்று கூடலில் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வில் பிரான்சு லா குறுநோவ் நகரசபைப் பிரதிநிதி திரு.அந்தோனி றூசெல் கலந்து கொண்டு உரையாற்றியதோடு தமிழ் நகரசபைப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
மேலும் பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பின் பேச்சும் இடம்பெற்றது.
உலகமே எம்மை ஏன் சிறையிலிட்டாய்? என்ற கேள்வியோடும், தமிழ் மக்களின் அவலங்கள் தாங்கிய பதாகைகளோடு தமிழ் மக்களுக்கான சுதந்திரத்தை வேண்டி வருகை தந்திருந்த அனைவரும் குரல் கொடுத்தனர்.
இவ் கண்டன ஒன்றுகூடலில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர். மாலை 18.00மணிக்கு ஒன்று கூடல் நிறைவு பெற்றது.