| |
பராக் ஒபாமா |
அமெரிக்க தொலைக்காட்சிகளில் பல பேட்டிகளை கொடுத்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா அமெரிக்க அரசியலில் இனபேதம் குறித்து பேசியுள்ளார்.
தன்னுடைய இனத்தால் அமெரிக்காவில் ஒரு சிலர் தன்னை வெறுக்கலாம் என்பதை தான் அப்போது அவர் ஆமோதித்து உள்ளார்.
ஆனால் அமெரிக்காவின் சுகாதார சேவைகளின் எதிர்காலம் குறித்து நடைபெற்று வரும் தீவிர விவாதத்தில் இது ஒரு முக்கிய பொருள் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
அதிபர் ஒபாமா கறுப்பினத்தவர் என்பதாலும், ஒரு கறுப்பினத்தவர் தங்களுடைய அதிபராக இருப்பதை விரும்பாமல் பராக் ஒபாமாவின் சுகாதாரசேவை திட்டங்களை ஒரு சிலர் எதிர்க்கின்றார்கள் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம் கார்டர் முன்பு கூறியிருந்தார்.