Boffin News | Daily India News | India Live News | News Papper from India | India Current News | Latest India News | India News | Current India News | India Abroad News | Indian Abroad News | Today India | Online India News| Indian Latest News | Indian News Online | India Headlines Today | Indian News WebSites | Website News From India | World Current News India
Pages
▼
Oct 16, 2011
ராம் போனார், நானி வந்தார்
கவுதம் மேனன் இயக்கத்தில் நீதானே என் பொன்வசந்தம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஜீவா. இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை மூன்று மொழிகளில் உருவாக்கிக் கொண்டிருக்கிறார் கவுதம் என்பதும் ரசிகர்கள் அறிந்த தகவல்தான். மூன்று மொழி படப்பிடிப்பும் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகிறது.
தெலுங்கில் நடிக்க அழைத்து வரப்பட்ட ராம், இந்த மூன்று மொழிகளால் ஏற்படும் தாமதத்தால் ஒரு நாளைக்கு ஒரு ஷாட்டில் மட்டுமே நடிக்க வேண்டியிருக்கிறதே என்ற வருந்தினாராம். எனவே அவர் இப்படத்திலிருந்து நாகரீகமாக விலகிக் கொண்டார். இதன் காரணமாக தெலுங்கிலும் ஜீவாவையே நடிக்க வைத்தால் என்ன என்று யோசித்துக் கொண்டிருந்தார் கவுதம். ஆனால் சமீபத்தில் ஹிட் ஆகியிருக்கும் தெலுங்கு படமான பிள்ளை ஜமீன்தார் படத்தின் ஹீரோ நானி மீது அவரது கண் போனதாம். ஏற்கனவே இவர் தயாரித்த வெப்பம் படத்திலும் இவர்தான் ஹீரோ. அவரை நடிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் இப்போது.

No comments:
Post a Comment
Visit : Click Here to Know the Latest News