•  
     
     
     
     
     
     
     
     
     
     
     

ஆசிரியை கொலை: பெற்றோரிடம் புகார் கூறியதால் மாணவர் ஆத்திரம்

சென்னை : சென்னையில் தனியார் பள்ளி ஆசிரியை ஒருவரை பள்ளி அறையிலேயே மாணவர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பாரிமுனையில் உள்ள செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் இந்தி டீச்சராக பணியாற்றியவர் உமா மகேஸ்வரி. இவர் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது அந்த வகுப்பில் இருந்த முகமது இர்மான் என்ற மாணவன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியை சராமாரியாக குத்தினான். இதில் சம்பவ இடத்திலேயே ஆசிரியர் மரணமடைந்தார்.

மாணவரைப்பற்றி அவரது பெற்றோரிடம் புகார் கூறியதாலேயே ஆசிரியை கொலை செய்யப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆசிரியையின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாணவர்களும், சக ஆசிரியைகளும் மருத்துவமனை முன்பு குவிந்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

0 comments

Leave a Reply

Visit : Click Here to Know the Latest News

Copyright 2011 BoffinNews All rights reserved.